ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்ணுக்கு ரொட்டி கொடுக்க மறுத்த ஊழியர்! எதற்காக தெரியுமா? கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த படி முகத்தை மறைத்திருந்த இளம் பெண், முகக்கவசம் அணியாததால், அவருக்கு பேக்கரி ஊழியர் தேவையான பொருளை கொடுக்க மறுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பறப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாட்டின் Minneapolis-ல் இருக்கும் பேக்கரில் ஒன்றி இஸ்லாமிய பெண்ணான Zahur Abdiaziz என்பவர் தனக்கு தேவையான பொருளை வாங்க சென்ற போது, கொரோனா வகை இனவெறிக்கு ஆளனதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஹிஜாப் அணிந்திருக்கும் இவரிடம் அங்கிருந்த ஊழியர், நீங்கள் முகக்கவசம் அணியவில்லை, என்னால் எதுவும் தர முடியாது என்று கூறுகிறார். குறித்த பெண்ணோ, இது தான் என்னுடைய முகக்கவசம் என்று கூறுகிறார்.

அதற்கு அவர் முகக்கவசம் இல்லை என்றால், சர்வீஸ் கிடையாது என்று தெரிவிக்கிறார். அதன் பின் அந்த பெண் இதை நீங்கள் முகக்கவசமாக நினைக்கவில்லையா என்ற போது, அவர் இல்லை, பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள் என்று கூறுகிறார்.

மீண்டும் அந்த பெண், இது நான் அணிந்திருக்கும் முக்கவசம் என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண் ஊழியர் உங்களுடைய முகக்கவசமாக இருக்கட்டும், ஆனால் முகக்கவசம் இல்லாமல் வந்தால் கொடுக்க வேண்டாம் என்றும், நான் இந்த கடையின் உரிமையாளர் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இதையடுத்து இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, குறித்த பேக்கரி நிர்வாகம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோருவதுடன், ஊழியரின் நடவடிக்கைகளால் வருத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த கடையில் எங்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எந்தவிதமான பாகுபாடுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் Minneapolis-ல் எந்த ஒரு கடைகளில் ஷாப்பிங் செய்ய சென்றால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்