என்ன நடக்கிறது இந்த நாட்டில்?: கருப்பின இளம்பெண் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும் மற்றொரு பொலிசார் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிசாரால் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தப்பட்டது ஜார்ஜ் பிளாய்டு மட்டுமில்லை போலிருக்கிறது.

ஜார்ஜின் மரணத்தைத் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன, அதுவும் அரசு அதிகாரிகளாலேயே.

தற்போது கருப்பினப்பெண் ஒருவரை வெள்ளையினப் பொலிசார் ஒருவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தனது காரிலிருக்கும் Safiya Satchell (33)என்ற கருப்பின இளம்பெண்ணை Jordy Yanes Martel (30) என்ற வெள்ளையின பொலிசார் வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறக்குவதைக் காணமுடிகிறது.

வீடியோவை காண

பின்னர், அவர் மீது மின்சார ஷாக் கொடுக்கும் கருவியால் தாக்கும் Martel, அந்த பெண்ணின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துகிறார்.>

அருகிலிருக்கும் ஒருவர் ஏன் அந்த பெண்ணை இப்படி நடத்துகிறீர்கள் என்று பதறியும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து Martel பொலிசாரிடம் சரணடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பணியில் இல்லாத நேரத்தில் Martel இரவு விடுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்ததாகவும், அவர் பொலிஸ் உடையிலேயே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இரவு விடுதிக்கு வந்த Safiya, விடுதி ஊழியர்களை திட்டியதாகவும், அவரை அங்கிருந்து அகற்றுமாறு விடுதி மேலாளர் கேட்டுக்கொண்டதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் Martel.

அவரை எச்சரிக்கவே தான அங்கு சென்றதாக தெரிவித்துள்ள Martel, தான் எவ்வளவு சொல்லியும் Safiya காரை விட்டு இறங்கவில்லை என்றும், அவரை இறக்கும்போது தன்னை அவர் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறக்கப்பட்ட Safiyaவை Martel மின்சார ஷாக் கொடுத்து தாக்கியதாகவும், அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதாகவும் தெரிவித்த அதிகாரிகள், Safiya வயிற்றில் பல காயங்கள் இருந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

ப்ளோரிடா மாகாண அதிகாரிகள், Martelஐ சிறையில் அடைத்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்