தன்னை இன ரீதியாக விமர்சித்த வெள்ளையினப்பெண்ணுக்கு கருப்பின இளம்பெண் கொடுத்த பதிலடி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தன்னை இனரீதியாக விமர்சித்த பெண்ணின் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டார் ஒரு கருப்பினப்பெண்.

கலிபோர்னியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இரு பெண்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தன்னை இனரீதியாக விமர்சிக்கும் வார்த்தையை அந்த வெள்ளையினப்பெண் கூற, அவரது முகத்திலேயே குத்திவிட்டார் அந்த கருப்பினப்பெண்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவைப் பார்க்கும்போது, அந்த வெள்ளையினப்பெண் அதிகமாக எக்ஸ்யூஸ் மீ என்றுதான் கூறுகிறார்.

ஆனால், வாக்குவாதம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் அந்த கருப்பினப்பெண்ணை அவர் இனரீதியாக விமர்சிக்க, ஏற்கனவே பயங்கரமாக கத்திக்கொண்டிருந்த அந்த கருப்பினப்பெண் ஆக்ரோஷமாகிறார்.

என்னை அந்த வார்த்தையைச் சொல்லிக் கூப்பிடு பார்க்கலாம் என்று அந்த கருப்பினப் பெண் மீண்டும் மீண்டும் கத்த, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருக்கும் அந்த வெள்ளையினப் பெண் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.

உடனே அவரை முகத்தில் சரமாரியாக குத்தும் அந்த கருப்பினப்பெண், அடி தாங்கமுடியாமல் கீழே உட்கார்ந்துவிட்ட நிலையிலும் அந்த வெள்ளையினப்பெண்ணை தாக்குவதோடு கடுமையாக திட்டுகிறார்.

அந்த வீடியோவைப் பார்த்தால் இன்னார் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது என்பதுபோல் உள்ளது.

வெள்ளையினப் பெண்ணின் கோபத்தைத் தூண்டி விட்ட கருப்பினப் பெண் மீது தவறா, அல்லது அவரை இனரீதியாக திட்டிய வெள்ளையினப்பெண் மீது தவறா என்றே புரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்