என் நுரையீரலில் ஏதோ இருக்கிறது! கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. எச்சரிக்கை செய்தி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனாவுக்கான பரிசோதனை செய்து கொண்டு அதன் முடிவுக்காக காத்திருந்த பெண் திடீரென வீட்டு சமையலறையில் சடலமாக கிடந்தது அவர் காதலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

New Orleans-ஐ சேர்ந்தவர் நடாஷா ஒட். இவருக்கு சமீபத்தில் காய்ச்சல், ஜலதோஷம் ஏற்பட்டது.

இதையடுத்து முதலில் சாதாரண ஜூரமாக இருக்கும் என நினைத்து அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டார். ஆனால் பின்னரும் அவருக்கு உடல்நலப்பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து நடாஷா தனது காதலன் ஜோஷிடம் என் நுரையீரலுக்குள் எதோ இருப்பது போல உள்ளது என கூறினார்.

இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் நடாஷா.

இதன்முடிவு திங்கட்கிழமை வரவுள்ளது, இந்த சூழலில் நேற்று முன் தினம் நடாஷாவுக்கு ஜோஷ் பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து வீட்டுக்கு சென்று அவர் பார்த்த போது நடாஷா சமையலையில் சடலமாக கிடந்தார். இது ஜோஷுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இது குறித்து ஜோஷ் கூறுகையில், கொரோனாவை பற்றி விளையாட்டாக எண்ணாதீர்கள். உங்களையும், நீங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய நேரமிது.

சமையலறையில் சடலமாக கிடந்த நடாஷாவை தொடவே எனக்கு பயமாக இருந்தது, அன்பான அவளை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் நடாஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது அதன் முடிவு வந்த பின்னரே தெரியவரும் என்ற நிலையில் அதையடுத்தே அவரின் இறப்புகான சரியான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்