நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கொரோனா வைரஸின் தீவிரமானது உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸைக் கையாள உதவும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார்.

மாநில மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ அவசரகால நிவாரண நிதியில் 50 பில்லியன் டொலர் வழங்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையானது மருத்துவ காப்பீட்டு விதிமுறைகளை தளர்த்துவதோடு, புதிய மருத்துவமனைகளை உருவாக்குவதையும், புதிய சிகிச்சை வழிமுறைகளை தேடுவதற்கும் வழிவகுக்கிறது.

அமெரிக்காவில் கோவிட் -19 வைரஸால் இதுவரை 1,701 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 38 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்