கை குலுக்கினார்... நெருக்கமாக இருந்தார்! டிரம்பை சந்தித்த அதிகாரிக்கு கொரோனா உறுதி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிபருக்கு பாதிப்பு ஏதேனும் இருக்குமோ என்ற அச்சம் நிலவியுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அப்படியே உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 1,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக மொத்த வாஷிங்டன் நகரும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிரேசில் பிரதமர் ஜெயிர் போலிஸோனாரா ஜனாதி்பதி டிரம்ப் உடன் சந்திப்பு நடத்தினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில், பிரேசில் அதிகாரிங்கள் பலர் கலந்து கொண்டனர். டிரம்ப் அந்நாட்டு அதிகாரிகள் எல்லோரையும் இதில் கை, கொடுத்து, கட்டிப்பிடித்து வரவேற்றார்.

இந்த சந்திப்பில் பிரேசில் பிரதமரின் தகவல் தொடர்பு செயலாளர், பேபியோ வாஜ்கார்டன் கலந்து கொண்டார்.

இதையடுத்து தற்போது பேபியோ வாஜ்கார்டனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நேற்று முதல் நாள் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் அவரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில், இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேபியோ வாஜ்கார்டன் அதிபர் டிரம்புடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

டிரம்பிற்கு கைகொடுத்து, அவருக்கு அருகில் பேபியோ வாஜ்கார்டன் இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் அதிபர் டிரம்பிற்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்குமா? அவருக்கு சோதனை செய்யப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் எனக்கு இந்த வைரஸ் குறித்து கவலையே இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் எதுவும் புதிதாக செய்யவில்லை. எனக்கு அதனால் கவலை இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அதே சமயம் வெள்ளை மாளிகை இதுகுறித்து தெரிவிக்கும் போது, டிரம்பிற்கும் காய்ச்சல் எதுவும் இல்லை. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதனால் இவரை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்