சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அந்தரத்தில் தொங்கிய பெண்! சிசிடி கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் கைது ஒருவர் தப்பிக்க முயன்ற நிலையில், அவர் பொலிசாரிடம் வசமாக சிக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹீயோ மாகாணத்தின் Miamisberg பகுதியில் இருக்கும் 85 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கிய குற்றத்திற்காக42 வயது மதிக்கத்தக்க Jessica Boomershine என்ற பெண், கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் Montgomery கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது காத்திருக்கும் அறையில் இருந்த அவர், அங்கிருந்து திடீரென்று தப்பிக்க முயன்றார்.

அந்த அறையில் இருந்த நாற்காலி ஒன்றை பயன்படுத்தி, அதன் மீது மேல் ஏறி, அங்கிருக்கும் ஒரு துளை வழியாக வெளியேற நினைத்தார்.

இதை அங்கிருந்த சக கைதிகள் கவனித்து கொண்டிருக்க, அப்போது அதன் வழியே வந்த பொலிசார் இதை காண, Jessica Boomershine அப்படியே மேற்கூரை உடைந்து விழுந்ததால், கீழே விழாமல் இருக்க அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட பொலிசார் உடனே அவரை பிடித்து, கீழே வைத்து கைது செய்கின்றனர்.

இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. இது சிறையில் இருந்து தப்பிப்பதற்கு மேற்கொள்ளப்படும் மோசமான முயற்சி என்று அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்வதற்காக அவரை சிறையில் இருந்து அழைத்து வந்து அதிகாரிகள் காத்திருப்பு அறையில் உட்கார வைத்துள்ளனர்.

அதை அவர் தனக்கு சாதகமாக்க நினைத்து தப்பிக்க முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...