இந்திய வம்சாவளி பெண் வெளிநாட்டில் மர்ம மரணம்: கணவர் கைது!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூகுள் கிளவுட் மேலாளராக பணிபுரியும் வாஷிங்டனைச் சேர்ந்த சோனம் சக்சேனா (43) தனது மனைவி ஸ்மிரிதி (41) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹவாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மனைவியுடன் அவர் கடற்கரைக்கு சென்றிருந்தபோது, திடீரென ஸ்மிரிதிக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே இன்ஹேலரை எடுப்பதற்காக தான் ஹொட்டல் அறைக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார் சக்சேனா.

சுமார் 40 நிமிடங்களுக்குப் பின் கடற்கரைக்கு இன்ஹேலருடன் திரும்பியபோது, அங்கே தன் மனைவியின் பர்ஸ் முதலான பொருட்கள் மட்டும் இருந்ததாகவும், தன் மனைவியை காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மறுநாள், Anaehoomalu வளைகுடாவிற்கு அருகே ஸ்மிரிதியை போன்ற தோற்றமுடைய ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஸ்மிரிதியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் சக்சேனாவை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கண்டெடுக்கப்பட்ட உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தம்பதிக்கு 13 மற்றும் 8 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ஸ்மிரிதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...