இறந்த மகனின் இதயதுடிப்பை 2 ஆண்டுகளுக்கு பின் கேட்ட தந்தை! நெஞ்சை உருக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்த மகனின் இதயத் துடிப்பை தந்தை, இரண்டு ஆண்டுகளுக்கு பின் கேட்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் Houston-ஐ சேர்ந்தவர் Jordan Spahn. இவருடைய Matthew(21) என்ற மகன் கடந்த அக்டோபர் மாதம் 2018-ஆம் ஆண்டு கார் விபத்தில் ஒன்றில் இறந்தார்.

கார் விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை Jordan Spahn தானம் செய்த மூலம் 5 பேருக்கு அது கொடுக்கப்பட்டது.

இந்த விபத்து நடந்து முடித்த நான்கு மாதங்களில் அவரின் மற்றொரு மகனும் கார் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

Matthew Spahn மற்றும் தந்தை Jordan (Image: Facebook)

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக Kristi Russ என்ற பெண்ணின் இதயம் செயலிழந்ததால், அவருடைய இதயம் 10 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால் Matthew-வின் இதயம் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதையடுத்து Jordan Spahn தற்போது, Kristi Russ-ஐ சந்தித்துள்ளார். அப்போது அவரின் இதய துடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்ட அவர் கண்கலங்கினார். அப்போது Kristi Russ இரவு நேரங்களில் ஸ்டெதஸ்கோப் இல்லாமல் கேட்கலாம், அந்தளவிற்கு அமைதி இருக்கும் என்று கூறுகிறார்.

அதற்கு Jordan Spahn அவன் இங்கே வெளியில் தான் இருக்கிறான் என்று கூற, இருவரும் ஒரு கட்டத்தில் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்குகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...