காதல் ரசம் சொட்டும் கதைகளை எழுதும் இந்திய-அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு காதலர் கொடுத்த ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

காதல் ரசம் சொட்டச் சொட்ட கதை எழுதும் இந்திய அமெரிக்க எழுத்தாளரான ஒரு பெண்ணுக்கு காதலர் தினத்திலேயே பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறார் ஒருவர்.

அலிஷா ராய் காதலர்களுக்கான டேட்டிங் ஏற்பாடு செய்யும் இணையதளம் முதலான விடயங்களில் ஈடுபாடு கொண்டவர்.

அவரது கதைகளில் கவர்ச்சி (வேறு மாதிரி கூறினால், பாலுறவு விடயங்கள்) நிரம்பி வழியும்.

அப்படிப்பட்ட காதல் கதை எழுத்தாளரையே ஏமாற்றிவிட்டார் ஒருவர். அதுவும் காதலர் தினத்தன்று... டேட்டிங் செல்வதற்காக முடிவு செய்த அலிஷாவும், அந்த நபரும் உணவகம் ஒன்றில் சந்தித்துள்ளார்கள்.

அப்போது, cake pop என்னும் உணவை ஆர்டர் செய்துள்ளார் அந்த நபர். உற்சாகமாகிவிட்டார் அலிஷா, காரணம் அந்த கேக் அலிஷாவுக்கும் மிகவும் பிடித்தது.

சரி, தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்த புதுக்காதலர் சூப்பராகத்தான் இருப்பார் என்ற நம்பிக்கை வர, கேக் சாப்பிட ஆவலாக உட்கார்ந்திருந்திருக்கிறார் அலிஷா.

ஆனால், கேக் வாங்கிவந்த நபரோ, அலிஷாவை உட்காரவைத்துவிட்டு, அவர் முன்னாலேயே கருமமே கண்ணாயினாராய் இரண்டு கேக்குகளையும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்.

வயிற்றுக்கும் ஏமாற்றம், மனதுக்கும் ஏமாற்றம் என, புகழ் பெற்ற காதல் கதை எழுத்தாளர் காதலர் தினத்தன்றே ஏமாந்துபோய் வீடு திரும்பியிருக்கிறார்.

அதற்குப் பிறகும் அந்த நபருடனான காதலைத் தொடர அலிஷாவுக்கு பைத்தியமா என்ன? ட்விட்டரில் அந்த நபரை ராட்சசன் என திட்டி, இந்த விடயத்தை ட்வீட் செய்திருக்கிறார் அலிஷா.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...