நிறவெறியின் வலியை புரிய வைக்க வலுக்கட்டாயமாக பெண்ணை கடத்தி 9 மணி நேரம் படம் பார்க்க வைத்த நபர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

நிறவெறி தாக்குதலின் வலியை புரிய வைப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஒரு மனிதன், பெண்ணை கடத்தி வலுக்கட்டயமாக 9 மணி நேரம் படம் பார்க்க வைத்துள்ளார்.

ஆப்பிரிக்க - அமெரிக்கரான 52 வயதான Robert Noye என்பவர், நிறவெறி தாக்குதலின் வலியை புரிய வைப்பதற்காக பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று 'ரூட்ஸ்' என்கிற மினி-சீரிஸ் ஒன்றினை பார்க்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

வீட்டிலிருந்து அந்த பெண் வெளியேற முயன்றபோது, தன்னுடன் அமர்ந்து படம் பார்க்கவில்லை என்றால் அவளைக் கொன்று சிகாகோ செல்லும் வழியில் Interstate 380 பகுதியில் உடல் பாகங்களை வீசி செல்வேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக Robert Noye-ஐ கைது செய்துள்ள பொலிஸார், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூட்ஸ் என்பது எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலியின் குடும்ப வரிசையைப் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான மினி-தொடர் ஆகும். 1977 ஆம் ஆண்டில் படமாக்கப்படுவதற்கு முன்னர் அவர் 1976 இல் முதன்முதலில் நாவலாக எழுதினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...