தலையணைக்கடியில் கத்தியுடன் தூங்கும் ஒரு தாய்... குழந்தைகளை திருடும் ஒரு தாய்... ஒரு திகில் வழக்கு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தாய் ஒருவர், தான் தலையணைக்கடியில் ஒரு கத்தியுடன் தூங்குவதாகவும், வீட்டில் பட்டாக்கத்தி ஒன்றை வாங்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்பே உருவான ஒரு தாய் இப்படிப்பட்ட பயங்கர நடவடிக்கைகள் எடுக்கக் காரணம்? வாஷிங்டனைச் சேர்ந்த எலிசா மில்லர் வீட்டுக்கு, ஜூலியட் பார்க்கர் என்ற ஒரு பெண்ணும், அவரது 16 வயது மகளும் வந்திருக்கிறார்கள்.

தாங்கள் குழந்தைகளை புகைப்படம் எடுப்பவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

குழந்தையை புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், பார்க்கரின் மகள், எலிசாவுக்கு கேக் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த கேக்கை உண்டதும் எலிசாவுக்கு மயக்கம் வந்துள்ளது.

உடனே சந்தேகம் அடைந்த அவர், பார்க்கரையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார்.

உடனே பார்க்கரும் அவரது மகளும், தாங்கள் தொட்ட பொருட்களை எல்லாம் கைரேகைகளை அழிப்பதற்காக துணியால் துடைத்திருக்கிறார்கள்.

அத்துடன், பார்க்கர் வீட்டு சாவியையும் திருடிக்கொண்டு, குழந்தையயையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல, மயக்கம் வரும் நிலையிலேயே பொலிசாரை அழைத்திருக்கிறார் எலிசா.

குழந்தையை கடத்த முயன்றதாக, பொலிசார் பார்க்கரை கைது செய்து, அவரது மகளை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

அதிலிருந்து தன் குழந்தைகளை எங்குமே தனியாக அனுப்புவதில்லை என்று கூறும் எலிசா, தான் தலையணைக்கடியில் கத்தியுடனேயே தூங்குவதாகவும், வீட்டில் பாதுகாப்புக்காக பட்டாக்கத்தி ஒன்றை வாங்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...