91 வயது மூதாட்டியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஆண் பராமரிப்பாளர்! கமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆண் பராமரிப்பாளர் ஒருவர் 91 வயது மூதாட்டியை மிகவும் மோசமாக தாக்குவதுடன், அவரை ஒரு பொம்பை போன்று தூக்கி எறியும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் Michigan நகரத்தின் Warren-ல் இருக்கும் Advantage Living Center-ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அங்கிருக்கும் பராமரிப்பாளர் Ronald Fletcher என்ற 64 வயது நபர் முதலில் வீல் சேரில் இருக்கும் அந்த 91 வயது மூதாட்டியின் கழுத்தை பிடித்து அழுத்துகிறார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் அவரை திடீரென்று ஒரு பொம்பை போன்று வீல்சேரில் தள்ளிவிடுகிறார். இந்த சம்பவம் கடந்த 2-ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இதனால் குறித்த மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டியை பார்ப்பதற்காக Advantage Living Center-க்கு அவருடைய பேத்தி வந்துள்ளார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

இது குறித்து கேட்ட போது Ronald Fletcher இது ஒரு விபத்து என்று கூறியுள்ளார். ஆனால் இதை அவர் நம்பாத பின்னரே அதன் உண்மை பின்னர் தெரியவந்தது.

இது குறித்து அவரின் பேத்தி Rachelle Sharp கூறுகையில், நான் அவரை பார்த்துவிட்டு சென்ற போது எந்த ஒரு காயமும் இல்லை, அதன் பின் வந்து பார்த்தால் அவர் தலையில் காயத்திற்கான மருத்து போடப்பட்டிருந்தது. இதை பிள்டசர் ஒரு விபத்து என்று கூறி கடக்க முயன்றார்.

என்னால் நம்ப முடியவில்லை, இவர்கள் என்ன செய்யபோகிறார்கள்? யாரையும் மிரட்டவா போகிறார்கள்? யாருக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கவில்லை, தங்களுக்கு மட்டுமின்றி, இதே போன்று மற்றவர்களுக்கும் நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் Ronald Fletcher வேலையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...