பற்றியெரியும் ட்ரக்குக்குள் சிக்கிக்கொண்ட முதியவர்... வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 20 பேர்: துணிந்து காப்பாற்றிய ஹீரோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மியாமியில் ட்ரக் ஒன்று பற்றியெரிந்துகொண்டிருக்க, அதற்குள் சிக்கிக்கொண்ட முதியவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் மக்கள்.

மொபைல் போனில் கமெரா என்று ஒன்று வந்தாலும் வந்தது, எதைக்கண்டாலும் வீடியோ எடுப்பதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் மக்கள்.

ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும் வீடியோதான், பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டாலும் வீடியோதான்.

இந்த சம்பவத்தில், அதேபோல் ஒரு ட்ரக் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, சுமார் இருபது பேர் சுற்றி நின்று அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது Jim Angulo என்னும் ஒருவர் தனது நண்பருடன் அவ்வழியே வந்திருக்கிறார். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட Jim, இது தனது கடமை என்று உணர்ந்ததாக தெரிவிக்கிறார்.

தனது நண்பருடன் அந்த காரின் அருகில் அவர் ஓடிச்சென்று பார்க்க, அந்த முதியவரின் கால்கள் ட்ரக்குக்குள் சிக்கிக்கொண்டிருக்க, அவர், என்னால் வெளியேற முடியாது, பயங்கர சூடாக இருக்கிறது என்று புலம்பியவாறே ட்ரக்கிலிருந்து வெளியேற முயன்றுகொண்டிருந்திருக்கிறார்.

உடனே Jim தனது நண்பர் உதவியுடன் அந்த முதியவரை ட்ரக்குக்குள்ளிருந்து வெளியே இழுத்து எடுத்திருக்கிறார்.

அவரது கைகளிலும் கால்களிலும் தீ பட்டு கொப்புளங்கள் உருவாகியிருந்ததாக தெரிவிக்கிறார் Jim.

பின்னர் அந்த முதியவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். Jimஇடம் நீங்கள் ஒரு ஹீரோ என்றால், நான் ஹீரோவெல்லாம் இல்லை, நான் இதேபோன்ற சூழ்நிலையில் சிக்கொண்டால் எனக்கும் யாராவது இதே போன்று உதவுவார்கள் என்று எண்ணமாட்டேனா, அப்படித்தான் இதுவும் என்கிறார் எளிமையாக.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...