எங்களால் உயிர் தப்பியிருக்கவே முடியாது: மொத்த குடும்பத்திற்கும் ஹீரோவான 5 வயது சிறுவன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தீயில் சிக்கிய குடியிருப்பில் இருந்து 5 வயது சிறுவன் செல்ல நாய் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி அந்தப் பகுதியின் ஹீரோவாக மாறியுள்ளான்.

ஜார்ஜியா மாகாணத்தின் பார்தோ கவுண்டியில் ஞாயிறன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

திடீரென்று அந்த குடியிருப்பில் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. உறக்கத்தில் இருந்த 5 வயது சிறுவன் பார்வையில் இது விழுந்துள்ளது.

உடனடியாக அந்தச் சிறுவன், தமது அறையில் தூக்கத்தில் இருந்த 2 வயது தங்கையுடனும் செல்ல நாயுடனும் ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளான்.

தொடர்ந்து தமது மாமா தூங்கும் அறைக்கு சென்று அவரை எழுப்பியுள்ளான். அவர் எழுந்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார்.

சிறுவன் நோவா இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என கண் கலங்கியுள்ளார் சிறுவனின் தாத்தா டேவிட் உட்ஸ்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர், சிறுவன் நோவா உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

வெறும் 5 வயது சிறுவன், பயப்படாமல் தமது சகோதரியையும், செல்ல நாயையும் காப்பாற்றியதுடன், மொத்த குடும்பத்தையும் ஆபத்தில் இருந்து தப்ப வைத்துள்ளது,

தற்போது பார்தோ கவுண்டியில் பேசு பொருளாக மாறியுள்ளது. சிறுவன் நோவாவுக்கு அங்குள்ள தீயணைப்பு துறை ஆதரித்து விருது வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதனிடையே உட்ஸ் குடும்பத்தாரின் குடியிருப்பு மொத்தமாக சேதமடைந்த சம்பவத்தில், பொதுமக்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...