கத்தி... துப்பாகியுடன் டிரம்பை கொல்ல வந்த மர்ம நபர்..! வெள்ளை மாளிகையில் பரபரப்பு

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொல்ல மர்ம நபர் ஒருவர் கத்தி மற்றும் தோட்ட இல்லாத துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை அருகே வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே ரோந்து சென்று கொண்டிருந்த ஒரு ரகசிய சேவை அதிகாரியை அணுகிய மர்ம நபர், தான் டிரம்பைக் கொல்ல வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கத்தி மற்றும் தோட்ட இல்லாத துப்பாக்கி ஏந்தியிருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ரோஜர் ஹெட்க்பெத் (25) சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார் என்று பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரோஜர் ஹெட்க்பெத் புளோரிடாவின் பிராண்டனைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அதிகாரிகள் விவரித்தனர்.

ஹெட்க்பெத்தை எவ்வளவு காலம் காணவில்லை அல்லது வாஷிங்டனுக்கு எப்படிச் வந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஹெட்ஜ்பெத்தை காவலில் எடுத்த பொலிசார், மனநல சோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரது வாகனத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்கா ஜனாதிபதியின் அட்டவணை படி, சம்பவம் நடந்த நேரத்தில் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே வர எந்தவித திட்டமும் இல்லையாம், எனினும் அவர் வெள்ளை மாளிகைக்கு உள்ளே இருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...