அமெரிக்காவில் துப்பாக்கிசூடு: இருவர் பலி...7 பேர் காயம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் தென்கரோலினா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தென் கரோலினாவின் புளோரன்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் ஹார்ட்ஸ்வில் பகுதியில் உள்ள நேரடி இசை அரங்கான மேக்ஸ் லவுஞ்சில், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவரின் நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

டார்லிங்டன் கவுண்டி கொரோனர் டோட் ஹார்டி கூறுகையில், மாநில சட்ட அமலாக்கப் பிரிவு (எஸ்.எல்.இ.டி) குற்றம் நடந்த இடத்தைச் ஆய்வு செய்துவருவதாக கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்