திருமணமான சில நாளில் கைகோர்த்தபடி சாலையில் நடந்த தம்பதி! சிறிது நேரத்தில் மனைவியை பார்த்து அழுத கணவன்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணமான சில நாட்களில் சாலையில் புதுமணத்தம்பதி நடந்து சென்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Carlsbad-ஐ சேர்ந்தவர் ஜான் பிங்காம். இவருக்கும் ரோபின் என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு இருவரும் சாலையில் கைகோர்த்தபடி நடந்து சென்றனர்.

அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி இருவரும் விழுந்த நிலையில் புதுப்பெண் ரோபின் தலை தரையில் வேகமாக முட்டியதில் இரத்தம் வெளியேறி அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

அவர் கணவர் ஜானுக்கு லேசான காயம் ஏற்பட்டது, மனைவியின் நிலையில் பார்த்து கதறிய ஜான் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

ஆனால் ரோபின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்.

இதையடுத்து ஜான் கதறி அழுதார். அவர் கூறுகையில், என் மனைவியின் இழப்பை தாங்க முடியவில்லை.

இதற்கு காரணம் மோசமான சாலை தான், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்