பல பெண்களுக்கு தன் உயிரணுக்களை செலுத்தி குழந்தை பெற வைத்த மருத்துவர்! DNA பரிசோதனையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தை பேறுக்காக வந்த பெண்கள் உடலில் தன்னுடைய உயிரணுக்களை செலுத்தி குழந்தை பெற வைத்த மருத்துவர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Colorado-வை சேர்ந்த மருத்துவர் பவுல் ஜோன்ஸ் என்பவரே இவ்வாறான மோசமான செயலில் 1975-ல் இருந்து 1989 ஆண்டு வரை ஈடுபட்டுள்ளார்.

செயற்கையான முறையில் கருத்தரிக்க வேண்டி தன்னிடம் வந்த பல பெண் நோயாளிகளுக்கு தன்னுடைய உயிரணுக்களை செலுத்தி அவர்களை குழந்தை பெற செய்துள்ளார்.

அந்த பெண்கள், வேறு நபர்களின் உயிரணுக்களை செலுத்த கோரிய நிலையில் தன்னுடைய உயிரணுக்களை செலுத்தி மோசடி செய்துளார் ஜோன்ஸ்.

ஆனால் இந்த விடயத்தை சமீபத்தில் தான் DNA பரிசோதனை மூலம் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் தெரிந்து கொண்டனர்.

இதையடுத்தே ஜோன்ஸின் குட்டு வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஜோன்ஸால் ஏமாற்றப்பட்டவர்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் தன் மீதான குற்றத்தை ஜோன்ஸ் ஒப்பு கொள்ளாத நிலையில் அதை மறுக்கவும் செய்யவில்லை.

அதாவது, கருத்தரிக்க வேண்டும் என கோரிய பெண்கள் உயிரணுக்களை தான் கேட்டார்கள், அதனால் என் உயிரணுக்களை வைத்து குழந்தை பெற செய்தேன் என ஜோன்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்