அந்த உடை... மொபைலில் குறுந்தகவல்கள்: பயணிகளை விமானத்தை விட்டு வெளியேற்றிய டெல்டா ஏர்லைன்ஸ்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

மூன்று இஸ்லாமிய பயணிகளை விமானத்தை விட்டு வெளியேற்றியதற்காக டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு அமெரிக்கப் போக்குவரத்துத் துறை 50,000 டொலர்கள் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்டா நிறுவனம் பாரபட்சமான நடத்தையில் ஈடுபட்டுள்ளது என்றும், 3 பயணிகளை வெளியேற்றும்போது பாகுபாடு எதிர்ப்பு சட்டங்களை மீறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

விவகாரத்துக்குரிய இந்தச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரீஸில் உள்ள சார்லஸ் தி கால் என்ற விமானநிலையத்தில் நடந்தது.

டெல்டா விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமிய தம்பதியர் வெளியேற்றப்பட்டனர்.

இஸ்லாமிய உடை அணிந்திருந்ததாகவும், தமது கைக்கடிகாரத்தில் எதையோ அவர் உட்செருகினார் என்றும் சந்தேகமடைந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினார்கள்.

மேலும் அவர்களின் மொபைலில் அல்லா என்று பல குறுந்தகவல்களை அனுப்பியதாக விமான ஊழியர் ஒருவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து அந்த ஊழியர் விமானியிடம் கூற அவர்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்களை திரும்ப விமானத்துக்குள் அந்த விமானி அனுமதிக்கவில்லை.

இது ஒரு சம்பவம் என்றால் இன்னொரு சம்பவத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் ஆம்ஸ்டர்டாமில் விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

இதுவும் அமெரிக்காவுக்கு செல்லும் விமானம்தான், இவர்கள் மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் டெல்டா வெளியேற்றியது.

இந்த இரு சம்பவங்களும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டெல்டா விமான சேவை நிறுவனத்துக்கு அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறை 50,000 டொலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்