ஓடும் காரின் முன் இருக்கையில் இருந்த எலும்புக்கூடு: சாரதிக்கு அபராதம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அரிசோனாவில் காரின் முன் இருக்கையில் எலும்புக்கூடு ஒன்றை பயணி போல் அலங்கரித்து கொண்டு சென்ற சாரதியை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணிக்கும் சாலையில், தன்னுடன் இன்னொரு பயணி இருப்பதுபோல் காட்டுவதற்காக ஒரு எலும்புக்கூட்டிற்கு உடையும் தொப்பியும் அணிந்து கார் ஓட்டிச் சென்ற ஒரு சாரதி பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விதி மீறலுக்காக அந்த 62 வயது நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டுதான் இத்தகைய விதிமீறல்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது என முடிவு செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இன்னமும் பலர் இப்படி பொம்மைகள் போன்றவற்றை மனிதர்கள் போல வேடமிட்டு கொண்டு செல்வது நடந்துகொண்டுதான் உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்