தாய், தந்தை இல்லாத அனாதை என நினைத்து வாழ்ந்த பெண்! DNA பரிசோதனையில் காத்திருந்த நம்பமுடியாத ஆச்சரியம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பெண் DNA பரிசோதனை மூலம் தனது உண்மையான பெற்றோரை 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்ஸாஸை சேர்ந்தவர் Debbie Sallee. இவர் மூன்று வயதிலேயே தத்து கொடுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டார்.

தற்போது 51 வயதாகும் Debbie-க்கு தன்னை பெற்றெடுத்த தாயும், தந்தையும் எங்கேயோ இருப்பார்கள் என மனதில் நீண்ட காலமாக தோன்றி கொண்டே இருந்தது.

இந்த சூழலில் ancestry இணையதளம் மூலம் DNA பரிசோதனை செய்து தனது இரத்த சொந்தங்களை கண்டுபிடிக்கலாம் என்பதை அவர் உணர்ந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இணையதளம் மூலம் தனது பெற்றோரை கண்டுபிடிக்க இறங்கிய Debbie DNA பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் தனது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் கலிபோர்னியாவில் இருப்பதை Debbie கண்டுபிடித்து ஆச்சரியம் அடைந்தார்.

இது அவருக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து பேசிய Debbie, முதன் முதலில் என் தாயுடன் போனில் பேசினேன், அப்போது எனக்கு உங்கள் மீது கோபமில்லை, உங்களை நேசிக்கிறேன் என கூறினேன்.

அதற்கு என் தாய், நானும் உன்னை அதிகம் நேசிக்கிறேன், நீ திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி என கூறினார்.

இதே போல என் தந்தை, சகோதரர் ஆகியோருடனும் பேசினேன், பின்னர் அவர்களை நேரில் சந்தித்தது பெரும் நெகிழ்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்