வார்த்தைகளில் கவனமாக இருங்கள்: ஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்

Report Print Vijay Amburore in அமெரிக்கா
274Shares

அமெரிக்க தலைவர்களை கோமாளிகள் எனக்கூறிய ஈரான் உச்ச தலைவர், கவனமுடன் பேசுமாறு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று தெஹ்ரானில் ஒரு பிரார்த்தனைக்கு தலைமை தாங்கிய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, சமீபத்தில் கொல்லப்பட்ட உயர்மட்ட இராணுவ தளபதி குவாஷிம் சுலைமானி மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது குறித்து பேசினார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு கோமாளி என்றும், அவர் நன்கு பேசுவது போல நடித்து ஈரான் மக்களின் முதுகில் விஷ கத்தியை பாய்ச்சிவிடுவார் என்றும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரானின் "உச்ச தலைவர்" என்று அழைக்கப்படுபவர், சமீபத்தில் அவ்வளவு உச்சம் பெறாதவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் பற்றிச் சில மோசமான விடயங்களை கூறியுள்ளார். அவர்களின் பொருளாதாரம் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய மக்கள் துன்பப்படுகிறார்கள். அவர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

"அமெரிக்காவை நேசிக்கும் ஈரானின் உயர்ந்த மக்கள், மரியாதை கோருவதற்காக அவர்களைக் கொல்வதை விட, அவர்களின் கனவுகளை அடைய உதவுவதில் அதிக அக்கறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு தகுதியானவர்கள். ஈரானை அழிவை நோக்கி இட்டுச் செல்வதற்கு பதிலாக, அதன் தலைவர்கள் பயங்கரவாதத்தை கைவிட்டு ஈரானை மீண்டும் பெரியதாக்க வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்