அமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு

Report Print Vijay Amburore in அமெரிக்கா
794Shares

அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இந்திய மாணவி அவருடைய காரின் டிக்கியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தின் ஷம்பர்க் நகரைச் சேர்ந்த ஆஷரப் தபாவாலா என்கிற மருத்துவரின் மகள் 34 வயதான சுரேல் தபாவாலா.

சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வரும் சுரேல், அவரது தந்தையால் நடத்தப்பட்டு வரும் மருத்துவமையத்தில் பணிபுரிந்து வந்தார்.

டிசம்பர் 30 ஆம் திகதி அன்று உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற சுரேல், அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர், மறுநாள் காலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

Facebook

இதுசம்மந்தமாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இதற்கிடையில், தங்களுடைய மகளை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 டொலர் பரிசு வழங்கப்படும் என சுரேலின் குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில் சுரேல் குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்ட தனியார் புலனாய்வாளர்கள், சிகாகோவின் வெஸ்ட் கார்பீல்ட் பார்க் சுற்றுப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரேலின் காரை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

Facebook

சுரேலின் தந்தை கார் சாவியுடன் வந்த பிறகு காரின் டிக்கி திறக்கப்பட்டது. அப்போது போர்வையில் போர்த்தப்பட்ட நிலையில் சுரேல் சடலமாக கிடந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்