லொட்டரியில் பெண்ணுக்கு அடித்த $1 மில்லியன் அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய தருணம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணுக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடி போயுள்ளார்.

நியூ ஜெர்சியின் பர்லிங்டன் கவுண்டியை சேர்ந்தவர் மரியா லோபஸ்.

இவர் அடிக்கடி $1 அல்லது $2 பணம் கொடுத்து லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வந்தார். ஆனால் மரியாவுக்கு பெரிதாக பரிசுகள் எதுவும் விழவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக $10 கொடுத்து சுரண்டல் லொட்டரியில் மரியா பங்கேற்றார்.

அதில் மரியாவுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இது குறித்து மரியா கூறுகையில், நான் வெளியில் சென்ற போது காரில் ஏறுவதற்கு முன்னர் ஜாலியாக லொட்டரி விளையாடிய போது இந்த பரிசு விழுந்தது.

இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என இன்னும் திட்டமிடவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்