இராணுவ தளபதி குவாசிமை கொன்றதையடுத்து யாரும் எதிர்பார்க்காத விடயத்தை செய்த டிரம்ப்! வெளியான வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

மேற்கு ஆசிய நாடான ஈரானின் இராணுவ முக்கிய தளபதி குவாசிம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேரணி நடத்தியுள்ளார்.

ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.

இதற்கு அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் நடத்திய நாடகம் இது என ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன் 'காகஸ்' எனப்படும் பிரதி நிதிகள் தேர்வுக்கான தேர்தல் விஸ்கான்சின் மாகாணத்தில் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் பேரணி நடத்திய டிரம்ப் அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் பிரச்சனை குறித்தே அதிகம் பேசினார்.

அவர் பேசிகையில், உலகின் நம்பர் 1 பயங்கரவாதியாக செயல்பட்டதால் தான் குவாசிம் மீது நடவடிக்கை எடுத்தோம்.

மிகக் கொடூரமான பயங்கரவாதியான அவர் நூற்றுக்கணக்கானோர் சாவுக்கு காரணமானவர். இவரால் ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்துள்ளனர். இதுபோன்ற கொடூரனைக் கொன்றதால் நமக்கு நல்ல பெயர் கிடைத்து விடுகிறதே என்பதுதான் ஜனநாயகக் கட்சியினருக்கு எரிச்சல். அதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறினார்.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்