அணு ஆயுதங்கள் வேண்டாம்! அலட்சியப்படுத்த மாட்டேன்.. ஈரானில் போராட்டம் வெடித்த சூழலில் டிரம்ப் முக்கிய தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

ஈரானில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது தொடர்பில் முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் ஈரானில் வெடித்து சிதறிய விமானத்தில் இருந்த 176 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதாக ஒத்து கொண்டது.

இந்நிலையில் ஈரான் போக்கை கண்டித்தும், உச்சத்தலைவர் பதவி விலக கோரியும் அங்கு பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தடைகளும் எதிர்ப்பு போராட்டங்களும் ஈரானை திணறடித்துவிட்டன, வேறு வழியில்லாமல் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறினார்.

அவர்கள் வந்தால் அதை நான் அலட்சியப்படுத்த மாட்டேன், அது முற்றிலும் அவர்கள் முடிவு.

ஆனால் அணு ஆயுதங்கள் வேண்டாம், அத்துடன் போராட்டக்காரர்களை கொல்லாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்