அமெரிக்க இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்... 2 பேர் பலி! புகைப்படங்களை வெளியிட்ட பென்டகன்

Report Print Santhan in அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்களின் புகைப்படம் மற்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின், காந்தஹார் மாகாணத்தின் தாந்த் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தியதாக தாலிபான் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை கொள்கைப்படி உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின் 24 மணி நேரத்துக்கு வெளியிடப்படாது என்ற விதி உள்ளது.

Miguel Villalon

இந்நிலையில் தற்போது இறந்த இரண்டு இராணுவ வீர்களின் புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பெயர் Ian P McLaughlin(29) எனவும் மற்றொருவரின் பெயர் Miguel Villalon(21) என்றும் தெரிவித்துள்ளது.

McLaughlin அமெரிக்காவின் Virginia பகுதியை சேர்ந்தவர், Miguel Villalon ஆரோராவை சேர்ந்தவர். இந்த 2020-ஆம் ஆண்டில் உயிரிழந்த முதல் இரண்டு இராணுவ வீரர்கள் இவர்கள் தான் என்றும் McLaughlin கடந்த 2012-ஆம் ஆண்டும், Villalon 2018-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ian P McLaughlin

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்