176 பயணிகளுடன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்... பகீர் கிளப்பும் அமெரிக்கா!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ஈரானில் 176 பயணிகளுடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம், ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

உக்ரேனிய ஏர்லைன்ஸ் விமானம் 752 தெஹ்ரானின் இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலே தரையில் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 176 பேர் உயிரிழந்தனர். போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அழிந்த விமானத்தில் 82 ஈரானிய மக்களும் 63 கனேடியர்களும் இருந்தனர். கொல்லப்பட்ட மற்ற பயணிகள் சுவீடன், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

விமானம் விபத்துக்குள்ளானது குறித்து பெரும் கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அமெரிக்க ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

போயிங் 737-800 இன் கருப்பு பெட்டிகளின் உள்ளடக்கங்களை வெளியிட ஈரான் இதுவரை மறுத்து வருகிறது. பெயரிடப்படாத மூத்த பென்டகன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நியூஸ் வீக்கிற்கு அளித்துள்ள தகவலில், ரஷ்யா ஈரானுக்கு வழங்கிய எம் 1 மேற்பரப்பில் இருந்து தாக்கக்கூடிய வான் ஏவுகணை அமைப்பால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான கூற்றுக்களை உறுதிப்படுத்தும் அறிக்கையை அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்