அமெரிக்காவில் மருந்து கடைகள் முன் நீண்ட வரிசைகளில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள மருந்து கடைகள் முன் நூற்றுக்கணக்கானோர் மிக நீண்ட வரிசைகளில் நிற்கும் காட்சிகள் வெளியாகின. அவர்கள் நிற்பது மருந்து வாங்குவதற்காக அல்ல!

அவர்கள் கஞ்சா வாங்குவதற்காக அப்படி நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். ஜனவரி 1 முதல், அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் சட்டப்படி இன்பத்திற்காக கஞ்சா விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த கஞ்சாவை வாங்குவதற்காகத்தான் மக்கள் கடை திறப்பதற்கு வெகு நேரம் முன்பே கடைகள் முன் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.

சுமார் 30 கிராம் கஞ்சா வரை வாங்க அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இல்லினாயிஸில் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டவுடன், Forest Park என்ற இடத்தைச் சேர்ந்த Jackie Ryan என்பவர் கஞ்சா வாங்கி, முதலில் கஞ்சா வாங்கியவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இது போதாதென்று, கவர்னர் JB Pritzker கஞ்சா தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 11,000 பேருக்கு மன்னிப்பும் வழங்கியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...