ஓடும் இரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடத்த முயன்ற நபர்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஓடும் இரயிலில் பெண் ஒருவரை சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இரயில் ஒன்றில் பயணம் செய்த நபர், அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கண்டுள்ளார்.

அதன் பின் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்த அவர், ஒரு கட்டத்தில் இரயில் நின்றவுடன் திடீரென்று அந்த பெண்ணை தூக்கி சென்று New York City Subway 6-ல் இருக்கும் ஒரு இடத்தில் வைக்க, அந்த பெண் அதிர்ச்சியில் உடனே திட்ட, இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் மற்றும் அந்த பெண் அருகில் இருந்த நபர் வந்தவுடன், குறித்த பெண் மீண்டும் இரயிலில் ஏறிக் கொண்டார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், பெண்ணை தூக்கி சென்ற நபரின் பெயர் Sonny Alloway எனவும் 48 வயதான இவர் அந்த பெண்ணை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வெளியான இன்னொரு வீடியோவில் பயணிகள் சிலர் Sonny Alloway-வை அடிப்பது போன்று உள்ளது. அதன் பின் அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்ததால், விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்,

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...