அமெரிக்காவில் 'திரள்' கொலைகள் அதிகரிப்பு: 2019ஆம் ஆண்டின் அதிர்ச்சி தகவல்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் 2019ஆம் ஆண்டில் மற்ற ஆண்டுகளை விட Mass Killing அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், அசோசியேடட் பிரஸ், யுஎஸ்ஏ டுடே மற்றும் நார்தீஸ்டன் பல்கலைகழகம் ஆகிய நிறுவனங்களில் தகவலின்படி இந்த ஆண்டு நடந்துள்ள 41 சம்பவங்களில் 211 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2019ல் நடந்த இந்த 41 சம்பவங்களில் 33 தாக்குதல்கள் துப்பாக்கி மூலம் நடந்துள்ளன. கலிஃபோர்னியா மாநிலத்தில்தான் அதிக சம்பவங்கள் நடந்ததாக பதிவாகியுள்ளது. அங்கே இதுவரை எட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொலை செய்பவர் இல்லாமல் ஒரே நிகழ்வில் நான்கு அல்லது நான்குக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிகழ்வை மட்டுமே இது கணக்கில் கொண்டுள்ளது.

2019ல் மே மாதம் வர்ஜினியா கடற்கரையில் 12 பேர் கொல்லப்பட்டதும் ஆகஸ்ட் மாதம் எல் பாசோவில் 22 பேர் கொல்லப்பட்டதுமே மிகவும் மோசமான சம்பவங்களாக இது சுட்டுகாட்டியுள்ளது.

2019ல் அதிக திரள் கொலைகள் நடந்திருந்தாலும் இறந்தவர்களில் எண்ணிக்கை 211 ஆகும். இது 2017-ஐ விட குறைவு. 2017ல் மொத்தம் 224 பேர் இறந்துள்ளனர். 2017ல் லாஸ் வேகஸில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் 59 பேர் இறந்தனர். இது அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடுரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்த திரள் கொலைக்கான முக்கிய காரணமாக குடும்ப சண்டைகள், போதைப்பொருள் அல்லது கும்பல் தகராறு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

திரள் கொலைகள் அதிகரித்திருந்தாலும் தனிநபர் கொலைகள் குறைந்துள்ளது என குற்றவியல் நிபுணர் மற்றும் மினெஸ்டோனாவிலிருக்கும் மெட்ரொபாலிடன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் டென்ஸ்லி கூறியுள்ளார்.

ஆனால் குற்றங்கள் குறுகிய காலத்தில் அதிக அளவு பெருகியுள்ளது எனவும் கூறிய ஜேம்ஸ் டென்ஸ்லி இது திரள் கொலைகள் அதிகம் நடந்த காலம் போலத் தெரிவதாகக் கூறினார்.

அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தத்தில், துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உரிமை காக்கப்பட்டது. இந்த திரள் கொலைகளின் அதிகரிப்பு அமெரிக்க அமைச்சர்களை துப்பாக்கி பயன்பாட்டைக் கட்டுபடுத்தும் கொள்கைகளை புதுபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...