20 வயது நபரால் கத்தி குத்துக்கு ஆளான தம்பதி: ஹீரோவாக நின்று காத்த 12வயது சிறுவன்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், கத்திக்குத்துக்கு ஆளான முதிய தம்பதியினரை 12வயது சிறுவன் ஹீரோவாக செயல்பட்டு காத்துள்ளான்.

Lucian Johnston என்ற 20 வயது இளைஞர், காரினுள் வைத்து தனது தாத்தா மற்றும் பாட்டியிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர்களை கத்தியால் குத்தியுள்ளான்.

இதில், 92வயது மூதாட்டி மற்றும் அவரது கணவருக்கு கை கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தி குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே விரைந்து செயல்பட்ட Johnston-னின் 12வயது தம்பி , சகோதரனின் கையை தடுத்து கத்தியை வெளியில் விழ செய்துள்ளான்.

இதனால், அந்த தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் உயிர் பிழைத்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்ப இடத்தில் இருந்து தப்பி ஓடிய Johnston, பின் வீட்டின் பின்புறத்தில் மறைந்திருக்கும்போது பிடிபட்டான்.

முன்னதாக Johnston-னின் நடத்தையில் சில மாற்றங்கள் தோன்றியதால் வயதான தம்பதியினர், அவனை வீட்டில் தங்க வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கோபம் கொண்ட அவன் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

இந்த தாக்குதலில், 12வயது சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அச்சிறுவனை காவல்துறை அதிகரிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...