கிளம்பிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய விமானம்! இறப்பதற்கு முன்னர் கணவனுக்கு இளம் மனைவி அனுப்பிய மெசேஜ்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கிளம்பிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய விமானத்தில் இருந்த இளம்பெண் உயிரிழப்பதற்கு முன்னர் தனது கணவருக்கு இறுதியாக அனுப்பிய மெசேஜ் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

Louisianaவில் இருந்து சிறிய ரக விமானம் கடந்த சனிக்கிழமை கிளம்பிய நிலையில் அதில் மொத்தம் ஐந்து பயணம் செய்தனர்.

கல்லூரியில் நடக்கும் கால்பந்து போட்டியில் பங்கேற்கவே அதில் பயணம் செய்தவர்கள் சென்றார்கள். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த Ian Biggs (51), Vaughn Crisp (59), Gretchen Vincent, (51), Walker Vincent (15) மற்றும் McCord ஆகிய ஐவருமே உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Facebook

இதனிடையில் ஐந்து பேரில் McCord (30) என்ற இளம்பெண் விமானத்தில் ஏறியவுடன் தனது கணவர் ஸ்டீவன் செல்போனுக்கு தனது செல்போனில் இருந்து ”ஐ லவ் யூ” என மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த மெசேஜை ஸ்டீவன் உடனடியாக பார்க்காமல் தாமதமாகவே பார்த்துள்ளார்.

பின்னர் அவரும், ஐ லவ் யூ டூ என மனைவிக்கு மெசேஜ் அனுப்பினார்.

ஆனால் ஸ்டீவன் மெசேஜை McCord பார்த்தாரா அல்லது அதற்குள் உயிரிழந்துவிட்டாரா என தெரியவில்லை.

இது குறித்து ஸ்டீவன் கூறுகையில், என்னுடைய மெசேஜை கடைசியாக McCord பார்த்திருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன், விபத்துக்கான காரணம் குறித்து நான் ஆராயவில்லை.

ஏனென்றால் என் மனைவி எப்படியிருந்தாலும் என்னிடம் திரும்ப வரமாட்டாள் என்பதை நான் அறிவேன் என சோகத்துடன் கூறியுள்ளார்.

Scott Clause/USA Today

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...