எனக்காக பொருளை விட்டு சென்றதற்கு நன்றி... கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற திருடன்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆள் இல்லாத வீட்டிற்கு வந்த பார்சலை திருடிவிட்டு, திருடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிலாரி ஸ்மித் என்கிற பெண், தன்னுடைய நிறுவன முதலாளிக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக ஆன்லைனில் செல்போன் சார்ஜரை ஆர்டர் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், பார்சல் வீட்டை அடைந்துவிட்டதாக ஹிலாரிக்கு குறுஞ்செய்தி சென்றடைந்துள்ளது. பணியில் இருந்து வீடு திரும்பிய அவர், வாசலில் பார்சலை தேடியுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலாக அங்கு ஒரு கடிதம் மட்டும் இருந்துள்ளது. அதில், உங்களுடைய பொருளை திருடுவதற்கான வாய்ப்பை எனக்கு விட்டுசென்றதற்காக மிகச்சிறிய நன்றி. மிகவும் அருமை... நன்றி.. இப்படிக்கு உங்களுடைய பொருளின் புதிய உரிமையாளர்" என எழுதப்பட்டிருந்துள்ளது.

முதலில் இதனை படித்ததும் பக்கத்து வீட்டார் தன்னிடம் விளையாடுவதாக ஹிலாரி நினைத்துள்ளார். ஆனால் அதன்பிறகு தான் உண்மையிலேயே திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த இடுகை வைரலானதை அடுத்து பொலிஸாரின் கவனத்திற்கு சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் அதனை தங்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டு, திருடர்களிடம் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்