தந்தை என நினைத்து ஒருவருடன் வசித்து வந்த இளம்பெண்! 30வது வயதில் DNA பரிசோதனையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் வேறு நபரை தனது தந்தை என நினைத்து இளம் பெண் வாழ்ந்து வந்த நிலையில் DNA பரிசோதனை மூலம் தற்போது உண்மையான தந்தையை கண்டுபிடித்துள்ளார்.

Ohio மாகாணத்தை சேர்ந்தவர் ஆஸ்லே ஸ்மித். தற்போது இவருக்கு 30 வயதாகிறது.

ஆஸ்லே தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவரின் பாட்டி நீ அப்பா என கூப்பிடுவது உன்னுடைய நிஜ தந்தை என நான் கருதவில்லை என குண்டை தூக்கி போட்டார்.

இதிலிருந்தே ஆஸ்லேவுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது, இது குறித்து தாயிடம் கேட்க அவர் சரியான பதில் சொல்லவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் ஆம் வேறு நபர் தான் உன் தந்தை என ஆஸ்லேவிடம் கூறினார்.

இதையடுத்து ’23 and Me’ என்ற பிரபலமான DNA இணையதளம் மூலம் ஆஸ்லே தனது உண்மையான தந்தையை தேட துவங்கினார்.

ஆனால் அவரால் தந்தையை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருவழியாக கடந்த மாதம் 19 திகதி Mansfield Frazier என்ற பத்திரிக்கையாளர் தான் தனது தந்தை என கண்டுபிடித்தார்.

இதையடுத்து தந்தையும் மகளும் சமீபத்தில் சந்தித்து உருக்கமாக பேசி கொண்டனர்.

இது குறித்து ஆஸ்லே கூறுகையில், நான் தந்தை என குழந்தையில் இருந்து நினைத்தவர் என் மீது உண்மையான அன்பு செலுத்தவில்லை, உனக்கு பணம் வேண்டுமா என மட்டுமே என்னிடம் கேட்பார்.

இத்தனை வருடங்கள் கழித்து என் தந்தையை கண்டுபிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

என் தாயும், Frazierம் இளம்வயதில் நெருங்கி பழகினார்கள், அவர்களுக்கு தான் நான் பிறந்தேன். பின்னர் என் தாய் Frazier-ஐ பிரிந்து வேறு நபரை மணந்தார் என கூறியுள்ளார்.

Frazier கூறுகையில், என்னுடைய 76வது வயதில் என் மகள் எனக்கு கிடைத்துள்ளார், இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்