அக்காவை இழந்து தவிக்கும் பிரியங்காவின் சகோதரி! அவருக்காக வெளிநாட்டில் வாழும் நபர்களின் நெகிழ்ச்சி உதவி

Report Print Raju Raju in அமெரிக்கா

பிரியங்கா ரெட்டி சகோதரி கல்வி செலவுக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும் வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் ஓன்லைன் மூலம் நிதி வசூல் செய்ய முயற்சித்து வருகிறார்கள்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் 27ஆம் திகதி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

அவரை கொலை செய்த 4 கொடூரர்களை பொலிசார் கைது செய்த பின்னர் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

பிரியங்காவின் கொடூர மரணத்தில் இருந்து அவர் பெற்றோர் மற்றும் சகோதரி இன்னும் மீளவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் மூன்று இந்தியர்கள் பிரியங்கா குடும்பத்தாருக்கு GoFundMe என்ற ஓன்லைன் பக்கம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்கள்.

இதில் Delaware-ல் வடிக்கும் சந்தீப்குமார் என்பவர் கடந்த 29ஆம் திகதி நிதி வசூலிக்கும் பக்கத்தை துவங்கினார்.

$1 லட்சம் பிரியங்கா குடும்பத்துக்கு வசூல் செய்ய டார்கெட் வைத்துள்ளார்.

அதே போல Utahவில் வசிக்கும் த்ரினாத் என்பவர் $75,000 நிதியை பிரியங்கா குடும்பத்துக்காக வசூல் செய்ய முடிவெடுத்து கடந்த 1ஆம் திகதி அது குறித்து இணையத்தில் பதிவிட்டார்.

ஆனால் இதுவரை எந்த நிதியும் சேரவில்லை என தெரியவந்துள்ளது. அவர் கூறுகையில், பிரியங்கா குடும்பத்தை மீண்டும் மகிழ்ச்சியடைய வைக்க முடியாது.

ஏனென்றால் நடந்த சம்பவத்தை அவர்களால் என்றும் மறக்க முடியாது. இதோடு வருங்காலம் குறித்த நம்பிக்கையை அவர்கள் இழக்கலாம்.

பிரியங்காவின் சகோதரி தனது அக்காவை இழந்து தவிக்கும் வேளையில் அவரின் கல்வியை முழுவதுமாக முடிக்க பணம் உதவி செய்ய வேண்டும், ஆனால் நிதி வசூல் செய்வது குறித்து பிரியங்காவின் குடும்பத்தாரிடம் எந்தவொரு அனுமதியும் நான் பெறவில்லை, இது போன்ற சமயத்தில் அவர்கள் உதவி வேண்டும் என எப்படி கேட்பார்கள்? என கூறியுள்ளார்.

டெக்சாஸில் வசிக்கும் ராகவ் ரெட்டி கூறுகையில், டிசம்பர் 3ஆம் திகதி $10,000 நிதி வசூல் செய்யும் நோக்கில் GoFundMe பக்கத்தை தொடங்கினேன்.

தற்போது வரை வெறும் $5 தான் வசூலாகியுள்ளது என கூறியுள்ளார்.

பொதுவாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் யாராவது அங்கு இறந்துவிட்டால் அவர்கள் சடலத்தை தாய்நாட்டுக்கு கொண்டு வர நிதியுதவி பெறவே GoFundMe பக்கம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்