பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த கோடிக்கணக்கான பணம்! அதை அவர் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக பல கோடிகள் பணம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக அவர் வங்கிக்கு அது குறித்து தகவல் கொடுத்தார்.

டெக்சாஸை சேர்ந்தவர் ரூத் பலோன். இவர் நேற்று முன் தினம் காலை தூங்கி எழுந்து தனது செல்போனை பார்த்த போது அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர காத்திருந்தது.

காரணம், அவர் வங்கிக்கணக்கில் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.

இது குறித்து தனது கணவரிடம் அவர் கூற இருவரும் சேர்ந்து வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது இது தவறுதலாக நடந்து விட்டது என மன்னிப்பு கோரிய வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப எடுத்து கொண்டனர்.

அதே நேரம் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக வந்த மெசேஜை புகைப்படம் எடுத்து கொண்ட ரூத், கிண்டலாக என்னை ஒருநாள் எல்லோரும் கோடீஸ்வரியாக காண வேண்டும் என்பதற்காகவே அந்த மெசேஜை புகைப்படம் எடுத்தேன்.

அந்த பணம் உண்மையிலேயே எனக்கு கிடைத்திருந்தால் அதில் ஒரு பகுதியை தொண்டு பணிக்கும், தேவாலயத்துக்கும் கொடுத்துவிட்டு மீதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பேன் என ஜாலியாக கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்