வீட்டின் பாதுகாப்பு கமெராவில் இருந்து வந்த குரல்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்! வெளியான வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் அமேசான் ரிங் பாதுகாப்பு கமெரா ஒன்றில் இருந்து திடீரென்று நபர் ஒருவர் பேசியதால், குடும்பத்தினர் அதிர்ச்சி உறைந்து போயுள்ளனர்.

அமெரிக்காவின் Nebraska-வில் இருக்கும் வீடு ஒன்றில் Amazon Ring பாதுகாப்பு கமெரா ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று அந்த வீட்டில் இருக்கும் குழந்தை, தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி ஒன்று பார்த்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த Amazon Ring பாதுகாப்பு கமெராவில் இருந்து, தீடீரென்று ஒரு ஆண் நபரின் குரல் கேட்கிறது. அந்த நபர் டிவி பார்த்து கொண்டிருக்கும் குழந்தையிடம் பேச முயற்சிக்கிறார்.

அப்போது ஹலோ, நீ என்ன பார்க்கிறாய்? ஹலோ நான் உன்னிடம் தான் பேசுகிறேன் என்று கூறுகிறார். அப்போது அங்கு அந்த குழந்தையின் தந்தை வருகிறார். உடனே அந்த கமெராவில் இருந்து மீண்டும் ஹலோ என்று கூறப்படுகிறது.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? அவ்வளவு பசியா உங்களுக்கு என்று கேள்வி கேட்க, அவர் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு,

யார் அது என்று கேட்கிறார்? அதற்கு இது உங்களின் Amazon Ring என்று கூற, உடனே அவர் கமெராவின் அருகில் வந்து மீண்டும் யார் அது என்று கேட்கிறார்? இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த கமெரா யாரோவால் ஹேக் செய்யப்பட்டு தான் இது நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்