1,12,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர்... சிக்கிய காட்சி

Report Print Basu in அமெரிக்கா

1,20,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழ கலைப்படைப்பை, கண்காட்சிக்கு வந்த கலைஞர் ஒருவர் திடீரென சாப்பிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது..

இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் ‘காமெடியன்’ என்ற தலைப்பில் சுவரில் டேப் செய்த வாழைப்பழ கலைப்படைப்பு, மியாமியில் உள்ள ஆர்ட் பாசலில் உள்ள சர்வதேச கேலரி பெரோட்டினில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

‘உலகளாவிய வர்த்தகத்தின் சின்னம் ’ என போற்றப்பட்ட கலைப்படைப்பை இந்த வாரம் மூன்று பேர் வாங்கினர். ஆனால், செயல்திறன் கலைஞர் டேவிட் டதுனா அதை சுவரிலிருந்து எடுத்து சாப்பிட்டார்.

என்னால் முடிந்த கலை செயல்திறன். நான் மௌரிசியோரிசியோ கட்டெலன் கலைப்படைப்புகளை விரும்புகிறேன், இந்த படைப்பை நான் மிகவும் விரும்புகிறேன். இது மிகவும் சுவையாக இருக்கிறது என்று டதுனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டேவிட் டதுனா பழத்தை சாப்பிடுவதை கண்ட ஊழியர்களில் ஒருவரின் கோபமடைந்த போதிலும், வாழைப்பழம் விரைவாக மாற்றப்பட்டது, மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘காமெடியன்’ கலை அங்கீகாரரீதியாகவும் சான்றிதழுடன் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர்கள் வாழைப்பழத்தை மாற்றலாம் .

டதுனா கலைப் பணிகளை அழிக்கவில்லை. ‘வாழைப்பழம் கருத்து தான்’ என்று கேலரியின் இயக்குனர் லூசியன் டெர்ராஸ்கூறினார். பின்னர் மாற்றப்பட்ட வாழைப்பழத்தை பாதுகாக்க பொலிசார் நிறுத்தப்பட்டனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்