அமெரிக்க தேர்தலில் போட்டியிடவிருந்த தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! கிண்டல் செய்த டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா
835Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், நான் கோடீஸ்வரி கிடையாது, என்னிடம் போதுமான நிதி இல்லை என்று போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியான இவர் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டொலர் வரை நன்கொடையாக பெற்று மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்த கமலா ஹாரிஸ் தற்போது பரப்புரை செய்யக்கூட நிதியில்லாத காரணத்தால் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தற்போது கட்சியில் 3 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ், தேர்தல் பிரச்சாரம் செய்வதை முடித்துக்கொள்ள விரும்புவதாகவும், தனக்கு இதுவரை ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு கோடீஸ்வரி இல்லை எனக்கூறியுள்ள அவர், தேர்தலுக்காக செலவழிக்க தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதை அறிந்த அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மிகவும் மோசம். நிச்சயம் உங்களை மிஸ் பண்ணுவோம் கமலா என்று கிண்டலாக கூற, அதற்கு கமலா கவலைப்பட வேண்டாம் ஜனாதிபதி உங்களை விசாரணையில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்