தேவாலயத்தில் இருந்த மக்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சிறுமி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க தேவாலயத்தில் கறுப்பின மக்கள் அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்ட சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள பெத்தேல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் பெரும்பான்மையாக கறுப்பின மக்களே இடம்பெற்றுள்ளனர்.

இதனால் அவர்களை வெறுத்த வெள்ளை இனத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கொலை செய்ய மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளார்.

சிறுமியின் புத்திகத்தில் கொலை சதித்திட்டத்தை கண்டுபிடித்த ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பொலிஸார் சிறுமியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், இனவெறி காரணமாக சிறுமி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. மேலும், சில கத்திகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த நேரத்தில் தேவாலயத்தில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்