குவியல் குவியலாக மரகத கற்கள்.... மொத்தமும் பறிகொடுத்த நபர்: அதன் மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீக்கு நபர் ஒருவர் சுமார் 227 கிலோ அளவுக்கு மரகத கற்களை பறிகொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு கலிபோர்னியா மாநில வரலாற்றில் மிகவும் அழிவுகரமான மற்றும் ஆபத்தான காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கியது.

இது தொடர்பில் சேத மதிபீடு நடைபெற்று வந்த நிலையில், பலர் தங்களின் இழப்புகளை பட்டியலிட்டுள்ளனர்.

மட்டுமின்றி திங்களன்று நடந்த நீதிமன்ற விசாரணையிலும் இழப்பீடு தொடர்பில் பட்டியலிடப்பட்டது.

அதில் ஒருவரே தற்போது தம்மிடம் இருந்த 227 கிலோ மரகத கற்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதன் மொத்த மதிப்பு 280 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.

காட்டுத்தீ தொடர்பில் PG&E நிறுவனம் திவாலானதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மரகத கற்களை முற்றாக பறிகொடுத்ததாக கூறும் உரிமையாளரை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

தற்போது அந்த மரகத கற்கள் தொடர்பில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என PG&E நிறுவனம் கோரியுள்ளது.

மேலும் மரகத கற்கள் பாதுகாத்து வைத்திருந்ததாக கூறும் நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுமட்டுமின்றி, மேலும் 7 பேர் தங்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் என சுமார் 370 மில்லியன் டொலர் அளவுக்கு பட்டியல் அளித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு ஒரு முகாமில் இருந்து பற்றிய தீ 86 மனித உயிரை காவு வாங்கியதுடன், Paradise என்ற நகரத்தையே சிதைத்துவிட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...