உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பிரபலம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி மீண்டும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், மக்கள் சேவையில் ஈடுபடுபவருமான பில் கேட்ஸ் உலகின் பணக்காரர் என்ற தனது நிலையை மீண்டும் அதிகாரப்பூர்வமாக மீட்டெடுத்துள்ளார்.

110 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தனது அமேசான் போட்டியாளரை பின்னுக்கு தள்ளியிருப்பதாக ப்ளூம்பெர்க் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

109 பில்லியன் டொலருக்கும் குறைவான மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப்ரி பிரஸ்டன் பெசோஸ் - பில்லியனர் குறியீட்டின்படி, இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

பென்டகனின் அக்டோபர் அறிவிப்பால் மைக்ரோசாப்டின் பங்குகள் 4% உயர்ந்ததாகவும், அமேசான் பங்குகள் சுமார் 2% குறைந்ததாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்