ஏழு பிள்ளைகளை துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட தாயார்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஏழு பேரை துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட தாயார் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரிசோனா மாகாணத்தின் மரிகோபா பகுதியில் குடியிருந்து வந்தவர் 48 வயதான மச்செல் ஹாப்சன்.

இவரே தமது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஏழு பேரை துன்புறுத்தி வீடியோ வெளியிட்டவர்.

தமது வீடியோ அதிக பார்வையாளர்களை சென்றடையும் பொருட்டு மச்செல் ஹாப்சன் தத்தெடுக்கப்பட்ட தமது குழந்தைகள் ஏழு பேரை பட்டினி போட்டு துன்புறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைதான மச்செல் ஹாப்சன் மீது 24 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் Scottsdale மருத்துவமனையில் வைத்து நேற்று அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது துன்புறௌத்தல் வீடியோ மூலம் 2.5 மில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்