விமான நிலையத்தில் ஆடையின்றி காணப்பட்ட விமானி: அதன் பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தின் ஹொட்டல் அறையில் விமானி ஒருவர் நிர்வாண நிலையில் காணப்பட்ட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்தால் குறித்த விமானி இடைநீக்கம் செய்யப்பட்டதால் அதற்கு ஈடாக அவருக்கு சுமார் 300,000 டொலர் வழங்க டென்வர் நகர நிர்வாகம் முன்வந்துள்ளது.

கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ஹொட்டலில் கடந்த 2018 செப்டம்பர் மாதம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவரும் தற்போது United Airlines விமான சேவையில் விமானியாக பணிபுரிந்து வருபவருமான ஆண்ட்ரூ காலின்ஸ் ஹொட்டலின் 10-வது மாடியில் உள்ள தமது அறையின் ஜன்னலோரம் நிர்வாணமாக நின்றதாகவே குற்றச்சாட்டு.

இந்த வழக்கு நீதிபதியால் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் விமானி ஆண்ட்ரூ காலின்ஸ் அடுத்த 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சம்பவத்தன்று தமது அறையில் குளிக்க தயாரான விமானி ஆண்ட்ரூ காலின்சுக்கு திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

Denver Police Department

அப்போது நிர்வாணமாக நின்ற காலின்ஸ், அந்த அழைப்பினை பேசி முடிக்கும்போது 24 நிமிடங்கள் கடந்துள்ளது.

இந்த நிலையில் ஹொட்டல் அறையின் கதவு பொலிசாரால் தட்டப்படும் சத்தம் கேட்டது. அப்போது அவர் குளித்து முடித்திருந்தார்.

உடனடியாக அவரை கைது செய்த டென்வர் பொலிசார், முகம் சுழிக்கும் வகையில் பொது இடத்தில் நடந்து கொண்டதாக கூறி வழக்குப் பதிந்துள்ளனர்.

தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் இருந்த விமானி காலின்ஸ், பல நாட்கள் டென்வர் சிறையிலும் இருந்துள்ளார்.

தற்போது காலின்ஸ் மீதான குற்ரச்சாட்டை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இழப்பீடாக டென்வர் நகர நிர்வாகம் அவருக்கு 300,000 டொலர் தொகை அளிக்க முன்வந்துள்ளது.

விமானி காலின்ஸ் தாம் தனியாக அறையில் இருப்பதாலையே ஆடை ஏதுமின்றி நின்றுள்ளார். மட்டுமின்றி, 10-வது மாடியில் இருக்கும் தம்மை வெளியில் இருந்து எவரும் காண வாய்ப்பில்லை என்றே அவர் கருதியுள்ளார்.

காலின்ஸ் தங்கி இருந்த ஹொட்டல் அறைக்கும் 100 கெஜம் தொலைவிலேயே டென்வர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்