மெழுகுவர்த்தியுடன் விளையாடியபோது நடந்த விபரீதம்... அலறித்துடித்து ஓடிவந்த சிறுமி..!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மெழுகுவர்த்தியுடன் விளையாடியபோது திடீரென உடலில் தீப்பற்றியதில் 5 வயது சிறுமி அடையாமல் காணமுடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

ரெபெக்கா ரைட்மேன் (27) என்கிற தாயார் தனது மகள் உடல் முழுவதும் மூன்றாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானதை அடுத்து வீட்டில் மெழுகுவர்த்தி எரிப்பதை நிறுத்துமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரெபெக்கா ஒருநாள் தனது 5 வயது மகள் கியானாவை பாட்டி வீட்டில் விட்டு பணிக்கு சென்றுள்ளார். அந்த பாட்டி வீட்டில் வாசனைக்காக நறுமணத்துடன் கூடிய மெழுகுவர்த்திகளை வாங்கி பற்ற வைத்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் மெழுகுவர்த்திகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென அலறியடித்துக்கொண்டு பாட்டியின் அறையை நோக்கி ஓடிவந்துள்ளார்.

சத்தம் கேட்டு விழித்தெழுந்த அவர், சிறுமியின் உடல் முழுவதும் பற்றியிருந்த தீயை அணைத்துவிட்டு உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 33 சதவீத தீக்காயங்களுடன் சிறுமி ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு தற்போது தொடைகளில் உள்ள தசைகளை பயன்படுத்தி சில தீக்காயங்கள் குணப்படுத்தப்பட்டுள்ளன. சிறுமி லேசர் அறுவை சிகிச்சையையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் அவரது கழுத்து, கைகள், முகம் மற்றும் கைகளில் அதிக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுமாதிரியான சம்பவங்களை தடுக்க, குழந்தைகள் சுற்றி இருக்கும்போது பெற்றோர்கள் மெழுகுவர்த்தியை எரிப்பதை நிறுத்துங்கள் என ரெபெக்கா வேதனையுடன் தன்னுடைய மகளின் கதையை பகிர்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்