நடுரோட்டில் நகர முடியாமல் உயிருக்கு போராடிய கரடி.. அருகில் வந்த மற்றொரு கரடி செய்த உதவி.. கலங்க வைத்த வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கார் மோதியதில் படுகாயமடைந்து எழுந்து நடக்கமுடியாமல் சாலையில் போராடிய கரடி குட்டியை சக கரடிகள் வாயால் இழுத்து காப்பாற்ற முயன்ற வீடியோ கண்கலங்க வைத்துள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தில் இரவு நேரத்தில் சாலையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கார் மோதி சாலையில் அடிப்பட்டு கிடக்கும் கரடி குட்டி அங்கிருந்து நகரமுடியாமல் தவிக்கிறது.

கரடி சாலையில் இருப்பதால் அந்த வழியே வந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன.

அந்த சமயத்தில் அங்கிருந்த மற்றொரு கரடி அடிப்பட்டு கிடந்த கரடியை தனது வாயால் இழுத்து கொண்டு சாலை ஓரத்துக்கு அழைத்து சென்றது.

இதற்கு அங்கிருந்த மேலும் சில கரடிகளும் உதவின. இதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு ஊழியர்கள் வந்து பார்த்த போது காயமடைந்த கரடி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

உயிரிழந்த கரடியின் மீது பெண் ஓருவர் ஓட்டி வந்த கார் மோதியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்