17 வயது மாணவனுடன் நெருக்கம்... சிக்கிய 63 வயது பெண் ஆசிரியர்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் வீட்டில் தனது கணவருடன் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் Huntersville பகுதியை சேர்ந்தவர் Emma Ogle. 63 வயதாகும் இவர் அங்கிருக்கும் கேரின்ஜர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார்,

இந்நிலையில் Emma Ogle, 17 வயது மாணவனுடன் மிகவும் நெருக்கமாக உடல்ரீதியாக இருந்துள்ளார். இதனால் இது குறித்த சம்பவத்தில் கடந்த வியாழக்கிழமை இவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதனால் Emma Ogle மற்றும் அவரது கணவர் Michael Ogle(59) ஆகியோர் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இவர்களின் உறவினர் ஒருவர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது, ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருந்ததால், அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் விரைந்து வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே இருவரும் துப்பாக்கி குண்டுகளால் இறந்து கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் உடலை மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்