300,000 பேர் பின் தொடரும் அழகி: பாலைவனத்தில் தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

300,000 பேர் பின் தொடரும் அழகி ஒருவர் பாலைவனம் ஒன்றில் தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச பட தொழிலில் ஈடுபட்டிருந்தவரான Esmeralda Gonzalez (24) என்ற அழகிய இளம்பெண், கடந்த மே மாதம் 31ஆம் திகதி காணாமல் போனார்.

இண்ஸ்டாகிராமில் அவரை 300,000 பேர் பின் தொடரும் நிலையில்,திடீரென அவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் என்ன ஆனார், எங்கு போனார் என்று தெரியாமல் திகைத்த அவரது குடும்பத்தார், பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையைத் தொடங்கிய பொலிசாருக்கு தொடர்ந்து துப்புக் கிடைக்க ஆரம்பித்தது. துப்புக் கொடுத்தவர்கள் Christopher Prestipino (45) என்ற லாஸ்வேகாசைச் சேர்ந்த ஒருவரை கைகாட்டினார்கள்.

ஒருவர், Christopher அந்த காணாமல் போன பெண்ணை கொன்றுவிட்டார் என்று கூறினார். மற்றொருவர் Esmeralda, Christopher வீட்டில் இருந்தார் என்றும், அந்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை அவர் கொடுத்ததாகவும், ஏற்கனவே Esmeraldaவுக்கு மன நல பிரச்சினைகள் இருந்தது அவருக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பொலிஸ் விசாரணையில், மன நல பிரச்சினைகள் உடைய Esmeralda, தனக்கு போதைப்பொருள் கொடுப்பதை பொலிசாரிடம் சொல்லிவிடுவதாக Christopherஐ மிரட்டியிருக்கிறார்.

மிக நீண்ட நாட்களாக Esmeraldaவை Christopher தனது அறையில் கட்டி வைத்திருந்த நிலையில், ஒரு நாள் அவிழ்த்து விட்டபோது அவரை தாக்கியிருக்கிறார் Esmeralda. கோபமடைந்த Christopher, Esmeraldaவைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

பின்னர் அவரது உடலை போர்வை சுற்றி அருகிலுள்ள பாலைவனம் ஒன்றிற்கு கொண்டு சென்று, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ஒன்றிற்குள் போட்டு அதன் வாயை மரப்பலகையால் மூடி, அதன் மீது சிமெண்ட் கலவையை கொட்டி விட்டு சென்றிருக்கிறார் Christopher.

ஆனால், சிமெண்டின் கனம் தாங்காமல் அந்த தொட்டி சரிய, யாரோ அதற்குள் உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

பொலிசார் Christopher, அவரது அறைத்தோழர் ஒருவர், அவரது காதலி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்